சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்: ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி
சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிக்க அனுமதி அளித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) வெளியிட்டுள்ளார்.
உற்பத்தி நாடு அல்லாத வேறொரு நாட்டில் சர்வதேச நாணய கடிதம் (LC) திறக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை நிபந்தனைகளுடன் விடுவிக்க இதனூடாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிக் கட்டுப்பாட்டு
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாக தெரிவிக்கப்பட்டு, கடந்த மே மாதம் முதல் துறைமுகங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், ஆவணங்கள் மற்றும் பதிவு தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை விடுவிக்க நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்