வழுக்கைப் பிரச்சினைக்கு தீர்வு : சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மின்னணு சீப்பு
சீனாவின் பெய்ஹாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முடி உதிர்தல் மற்றும் வழுக்கை (ஆண்ட்ரோஜெனடிக் அலோபீசியா) பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், 'டிடாங்கிள்' என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய சோதனை மின்னணு சீப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்தக் கருவி அதன் பற்களுக்கு இடையில் துடிப்புள்ள மின்புலங்களை உருவாக்குகிறது. இது, சருமத்திற்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல், சிகிச்சைக்கான மூலக்கூறுகளை மயிர்க்கால்களின் ஆழத்திற்குள் கொண்டு செல்ல உதவுகிறது.
இந்த சிகிச்சையானது, இரத்த நாளங்களின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு மூலக்கூறையும் (VEGF-A), முடி உதிர்தலுக்கு ஒரு முக்கிய காரணியான DHT என்ற ஹோர்மோனைக் கட்டுப்படுத்தும் மற்றொரு மூலக்கூறையும் (SRD5A2 siRNA) பயன்படுத்துகிறது.
100% முடி வளர்ச்சி
எலிகள் மீது நடத்தப்பட்ட 28 நாள் ஆரம்பகட்ட சோதனைகளில், சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதிகளில் 98% முதல் 100% வரை முடி மீண்டும் வளர்ந்தது.

இந்த முடிவு, மினாக்ஸிடில் போன்ற வழக்கமான சிகிச்சைகளை விடச் சிறந்ததாகும். இன்றுவரை, இந்தத் தொழில்நுட்பம் விலங்குகள் மீது மட்டுமே சோதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அறிக்கைகளின்படி, இந்தக் கருவியை வணிகச் சந்தைக்கு உற்பத்தி செய்வதற்கு முன்பு, அதன் பாதுகாப்பு, நீண்டகால செயல்திறன் மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளைச் சரிபார்க்க மனிதர்களை உள்ளடக்கிய மருத்துவ சோதனைகள் அவசியமாகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |