நடைமுறைப்படுத்தப்பட்ட வற் வரி : உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றங்கள்!
சிறிலங்கா உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக டப்ளியூ. ஏ. சேபாலிகா சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தாண்டு தினமான நேற்று (1) முதல் நடைமுறைாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக 6 மாத காலத்துக்கு பணியாற்றிய உபுல் ஜயவர்தனவின் சேவைக்காலம் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.
பதில் ஆணையாளர் நாயகம்
திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவி வெற்றிடமாக இருந்ததையடுத்து, உபுல் ஜயவர்தன குறித்த பதவிக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவரது ஆறு மாத சேவைக்காலம் நிறைவுக்கு வந்ததையடுத்து, திணைக்களத்தின் ஆணயாளர் நாயகம் பதவி மீண்டும் வெற்றிடமாகியிருந்தது.
புதிய நியமனம்
இலங்கையில் நேற்று முதல் பெறுமதி சேர் வரி நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், வரி தொடர்பான நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்க சரியான தலைமைத்துவம் தேவை என்பது கண்டறியப்பட்டது.
இதற்கிணங்க, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக டப்ளியூ. ஏ. சேபாலிகா சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு திணைக்களத்தின் மதிப்பீட்டாளராக தனது சேவையை ஆரம்பித்ததோடு, திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பல பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |