நீர்கொழும்பு சிறைச்சாலை சேதங்களை விசாரிக்க விசேட குழு நியமனம்!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட சேதங்களை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை போதைபொருள் கடத்தல் வன்முறை சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
மேலும் மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பதிவி உயர்வும், இழப்பீடுகளை வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் காரணமாக அந்த வளாகம் கைதிகளுக்கு பொருத்தமான இடமில்லை என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |