இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்...!
Ranil Wickremesinghe
Bribery Commission Sri Lanka
Presidential Update
By Kathirpriya
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (02) சற்று முன்னரே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
இந்த நியமனம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடக பிரிவு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி