89 பேரை காவு கொண்ட புதியநோய் -மருத்துவர்கள் பெரும் குழப்பம்
death
doctor
sudan
new illness
By Sumithiran
ஆபிரிக்க நாடான தெற்கு சூடானில் அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் வடக்குப்புற மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்கொக்கில் மர்ம நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட மக்களிடமிருந்து இந்த நிபுணர்கள் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக வாந்திபேதி ஏற்பட்டிருக்கலாம் என்று கருதிய நிலையில் அதற்கு எதிர்மறையான முடிவுகள் தெரியவந்துள்ளதால் புதிய நோய் குறித்து மருத்துவ ஆய்வாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்