ஈழத்தமிழர்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக புதிய வரைபு

Sri Lankan Tamils Batticaloa Ethnic Problem of Sri Lanka
By Vanan Jul 09, 2023 03:39 PM GMT
Report

ஈழத்தமிழர்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக வரைபு ஒன்றை தயாரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

நேற்றும் (கிளிநொச்சி) இன்றும்(மட்டக்களப்பு) இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அதில் பங்கேற்ற யாழ். பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையின் தலைவர், பேராசிரியர் ரி. கணேசலிங்கம்  இதனைத் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் கலந்துரையாடல்

இந்த தீர்மானம் தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில், “இந்த வரைவை தயார் செய்து வரைபினுடைய உள்ளடக்கங்கள் அனைத்தையும் சிவில் அமைப்புகளோடு உரையாடி, அதில் என்னென்ன விடயங்களை மேலும் இணைத்துக் கொள்ளுதல், சேர்த்துக் கொள்ளுதல், அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றியும் சிவில் அமைப்புகளுடைய காத்திரமான பங்கு இந்த வரைபுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடும் வடக்கு கிழக்கை சேர்ந்த சிவில் அமைப்புகளை கடந்த இரண்டு நாட்களில் சந்தித்திருக்கிறோம் - கலந்துரையாடி இருக்கிறோம்.

அது தொடர்பான சில விமர்சனங்கள் அல்லது வாதங்கள் அல்லது அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான உள்ளடக்கங்களை அந்த வரைவுக்குள் முதன்மைப்படுத்துகின்ற விதத்தில் சிவில் அமைப்புகள் முக்கியமான அம்சங்களை முன் வைத்திருக்கின்றார்கள்.

குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிவில் அமைப்புகள் அதிகமான விடயங்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் இது தொடர்பான உள்ளடக்கங்களை மேலும் வலிமைப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான உரையாடலை செய்வதற்குமான உத்தியை அவர்கள் எங்கள் முன்னிலையில் வழிமொழிந்திருக்கிறார்கள்.

பூர்வாங்க வேலைகள்

ஈழத்தமிழர்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக புதிய வரைபு | New Draft Solution Political Problems Eelam Tamils

வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி சமகால அரசியல் கலந்துரையாடல் ஆரம்பம்

நிச்சயமாக இந்த வரைவு ஈழத்தமிழர்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அரசியல் கட்சிகள் அதேபோன்று சிவில் அமைப்புகள், புலம்பெயர் தளத்தில் இருக்கின்ற அமைப்புகள் அனைவருக்கும் இடையில் ஒரு பொதுவான, அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வாக இந்த விடயத்தை முதன்மைப்படுத்துவதற்கு நோக்கம் கொண்டு தான் மக்கள் சிந்தனை மையம் அதை ஏற்படுத்தி இருக்கிறது.

2021 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் சிந்தனை மையம் அரசியல் கட்சிகளோடு உரையாடி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு உரையாடி இந்த வகையான ஒரு வரைபை வரைந்து அந்த வரைபை மக்களிடம் அல்லது சிவில் அமைப்புகளிடம் அதற்குரிய தெளிவையும் அதற்குரிய உண்மை தன்மையும் வலியுறுத்திவிட்டு மீண்டும் அரசியல் கட்சிகளோடு இந்த விடயம் தொடர்பாக உரையாடி, அதேபோல் புலம்பெயர் தளத்தில் இருக்கின்றவர்களுடன் இந்த விடயம் தொடர்பாக உரையாடி ஒரு இறுதி முடிவை எடுத்த பிற்பாடு பூடகங்கள் சார்ந்து இறுதி முடிவினுடைய வடிவத்தை நாங்கள் ஒப்புவிப்பது என்று தீர்மானித்திருக்கிறோம்.

அதற்கான பூர்வாங்க வேலைகளை இந்த சிவில் அமைப்பின் உடைய உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள், சார்ந்திருக்க கூடியவர்கள் மேற்கொள்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

வரக்கூடிய இந்த வரைபினுடைய உள்ளடக்கம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய அல்லது இலங்கையினுடைய அரசியல் பரப்பில் பொருத்தப்பாடு உடையது என்று கருதப்படக் கூடிய விடயங்களை உள்ளடக்கி தான் இந்த சிவில் தரப்புகளுடன் சேர்ந்து மக்கள் சிந்தனை மையம் இந்த வரைபை முதன்மைப்படுத்தி இருக்கிறது.

ஒரு கூட்டு ஆட்சி தன்மை குறித்த வரைபாகவே இதனுடைய உள்ளடக்கம் காணப்படுகிறது.

அதேநேரம் இது கூட்டு சமஷ்டியையும் சமஷ்டிக்குரிய மாதிரிகளையும் இந்த வரைபில் பேசப்படுகிறது. 13 சார்ந்து பேசப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் முதன்மைப்படுத்துகின்ற வகையில் ஈழத் தமிழர்கள் ஒரே வரைபாக இந்த விடயத்தை முதன்மைப்படுத்துகின்ற நோக்கோடு இந்த வரைபினுடைய உள்ளடக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் ஊடாக ஈழத் தமிழர்களுக்கான அரசியல் பிரச்சனைக்குரிய தீர்வை இந்த வரைவு தனக்குள்ளே உள்ளடக்க வேண்டும் என்பதும், அந்த உள்ளடக்கம் சார்ந்த அதனுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண உரையாடல்களை எல்லா தளத்திலும் முதன்மைப் படுத்த வேண்டும் என்றும் சிவில் அமைப்புகளோடு சேர்ந்து முயற்சித்திருக்கிறோம்.

ஈழத்தமிழர்களின் கைகளில் நிரந்தர அரசியல் தீர்வு - தலைவிதியை தீர்மானிப்பார்களா..!

வரைபினுடைய உள்ளடக்கம்

ஈழத்தமிழர்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக புதிய வரைபு | New Draft Solution Political Problems Eelam Tamils

முஸ்லிம்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இருக்கின்ற சிங்கள மக்களும் தங்களுடைய தேசிய தனித்துவங்களை பேணக் கூடிய வகையில் இந்த வரைபினுடைய உள்ளடக்கம் காணப்படுகிறது. (அவர்களுடைய அடிப்படை உரிமைகள், அவர்களுடைய வாழ்வியல், அவர்களுடைய இருப்பு, அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய பாதுகாப்பு, அவர்களை தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு சூழல் இவற்றிற்கு ஏற்ற வகையில்)

வடக்கு கிழக்கில் இருக்கின்ற ஈழத் தமிழர்கள் எவ்வாறு முதன்மைப்படுத்தப்படுகின்றார்களோ அவ்வாறான முதன்மைப்படுத்தல் முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்கும், மலையக மக்களுக்கும் உரித்தாக இந்த வரைவு தனது உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025