தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விசேட அறிவிப்பு
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஹரிணி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தரம் 6 மாணர்களுக்கான அனைத்து கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்சிடப்பட்ட புதிய பாடதிட்டங்கள்
மாணவர்களின் பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அதனை சரிபார்த்து அச்சிடப்பட்ட புதிய பாடதிட்டங்களை ஆய்வு செய்வதற்காக நியமித்த குழு அதன் திருத்தங்களை சரிபார்த்து இறுதி செய்துள்ளது.

ஆய்வு குழுவால் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள், இந்த மாதம் அச்சு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவுள்ளன.
புதிய பாடத்திட்டங்களுக்கான ஆசிரியர் பயிற்சி காலம் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான கூட்டங்கள் ஜூலை மாதத்தில் ஆரம்பமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |