ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி! மொஜ்தாபா காமேனியின் அதிரடி உத்தரவு
ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி (IRGC - இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தலைவரான மொஹ்சென் ரெசாயை (Mohsen Rezaee) நியமித்துள்ளார்.
இந்த முக்கியப் பொறுப்பில் ரெசாய், உச்சத் தலைவர் காமேனியின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
இப்பதவியை வகித்து வந்த அலி லாரிஜானி, கடந்த மார்ச் மாதம் அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அரசியல் ஆலோசகர்
அவரைத் தொடர்ந்து முகமது பாகர் ஜோல்காதர் (Mohammad Bagher Zolghadr) இப்பதவியைக் கவனித்து வந்தார்.

இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, முகமது பாகர் ஜோல்காதரைத் தனது அரசியல் ஆலோசகராக உச்சத் தலைவர் காமேனி நியமித்துள்ளார்.
உயர்மட்ட அமைப்பு
இவர், 1980 களில் நடைபெற்ற ஈரான்-ஈராக் போரின் போது (ஈரானில் இது புனிதப் பாதுகாப்புப் போர் என்று அழைக்கப்படுகிறது) முக்கிய இராணுவத் தளபதியாகச் செயல்பட்டவர்.

அத்தோடு ஈரானின் பலம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர்.
இந்தநிலையில் தற்போது ஈரான் நாடாளுமன்றத்திற்கும் கார்டியன் கவுன்சில் அமைப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் உயர்மட்ட அமைப்பான ஈரானின் நன்மதிப்பு நிருணயக் கவுன்சிலின் (Expediency Discernment Council) உறுப்பினராகவும் ரெசாய் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |