வருகிறது புதிய கல்வி சீர்திருத்தம்: வெளியாகியுள்ள அறிவிப்பு
புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், அதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தனது தலைமையில் கூடியபோது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்கள் ஐந்து முக்கிய தூண்களின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்த அறிமுகம்
புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் சரியான மதிப்பீடு ஆகிய முக்கிய தூண்களின் கீழ் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்யுள்ளார்.
இந்த நிலையில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு 2026 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்