மின்சார சட்டமூலம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட புதிய மின்சார சட்டமூலத்திற்கு நேற்று (27) நாடாளுமன்ற சபாநாயகரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, புதிய சட்டம் நேற்று (27) முதல் நடைமுறைக்கு வருகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் மின்சாரத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சட்டமூலத்தின் முக்கிய விதிகள்
தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுதல் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை (PUCSL) தொழிற்துறை ஒழுங்குபடுத்துபவராக நியமித்தல் ஆகியவை சட்டமூலத்தின் முக்கிய விதிகளாகும்.
மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கு 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கூட்டாண்மை நிறுவனங்களை உருவாக்கவும் இந்த சட்டமூலம் கட்டாயப்படுத்துகிறது.
கூடுதலாக, இது 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தை இந்த சட்டமூலம் இரத்துச் செய்கிறது.
The New Electricity Bill that was passed in Parliament three weeks ago, was endorsed by the Hon Speaker yesterday. pic.twitter.com/n4sjpy8lp8
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 28, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |