மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற வாய்ப்பு! கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்
தங்கள் மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்து, அதற்கான வாய்ப்பு கிடைக்காத பயனர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்க கூகுள் தற்போது தயாராகி வருகிறது.
அதன்படி, இந்தப் புதிய அம்சம் செயல்படுத்தப்பட்டதன் மூலம், தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரியைப் பாதிக்காமல் விரும்பிய பெயரை மாற்றிக்கொள்ள பயனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
புதிய மின்னஞ்சல்
புதிய கணக்கை உருவாக்காமலும், ஏற்கனவே உள்ள கணக்கில் உள்ள தகவல்களை மாற்றாமலும் புதிய மின்னஞ்சல் பெயரைத் தேர்வுசெய்ய இது பயனர்களை அனுமதிக்கும்.

அதன்படி, பயனர்கள் தங்கள் தற்போதைய @gmail.com முகவரியை புதிய பெயருடன் கூடிய முகவரியாக மாற்றலாம்.
இருப்பினும், இது '@gmail.com' உடன் முடிவடையும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தும் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
அதன்படி, தனிப்பயன் டொமைன்கள், பணி மற்றும் பாடசாலை முகவரிகளுக்குப் பயன்படுத்தப்படும் கணக்குகளின் பெயர்களை இதன் கீழ் மாற்ற முடியாது.

இதேவேளை, இந்த புதிய அமைப்பை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கூகுள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, @gmail பயனர்பெயர் மாற்றப்பட்டவுடன், 12 மாத காலத்திற்குப் பிறகுதான் அதை மீண்டும் மாற்ற முடியும். இந்த காலகட்டத்தில், தேவைப்பட்டால் மட்டுமே முந்தைய முகவரிக்குத் திரும்ப முடியும் என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |