அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரே நாளில் குவிந்த பல மில்லியன் வருமானம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை வீதி அபிவிருத்தி அதிகார சபை (Road Development Authority) தெரிவித்துள்ளது.
நேற்று (25) மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
170,069 வாகனங்கள்
அதற்கு முந்தைய நாளிலும் (24) அதிவேக நெடுஞ்சாலைகளில் 170,069 வாகனங்கள் பயணித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் அதன் மூலம் 61.7 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை பண்டிகைக் காலம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுவதால், பயணிகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |