வட்ஸ்அப் செயலியில் வருகிறது புதிய மாற்றம்..!
WhatsApp
Sri Lanka Social Media
By Kanna
சமூக ஊடக தளமான வட்ஸ்அப் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது என்று மெட்டா தளங்களின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
முகநூல் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்படி,
- வட்ஸ் அப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகுவதை இனி பிறர் அறியமுடியாது,
- ஓன்லைனில் இருக்கிறீர்களா என்பதை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதி,
- ஒருமுறை மட்டுமே பார்க்கும்படியான செய்திகளை (view once messages) ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது.
இதேவேளை, "உங்கள் செய்திகளைப் பாதுகாப்பதற்கான புதிய வழிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டே இருப்போம், அவற்றை நேருக்கு நேர் உரையாடல்களாக தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்போம்" என்று ஸக்கர்பெர்க் குறித்த முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி