விடுதலைப் புலிகளின் படகுகளுக்கும் அனுமதி - பச்சைக்கொடி காட்டுமா இந்தியா..! உண்மையை போட்டுடைத்த அமைச்சர்

Nimal Siripala De Silva Sri Lanka India
By Vanan Jul 10, 2023 03:38 PM GMT
Report

இந்தியா அனுமதி அளிக்கும் பட்சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படகுகளைக் கூட இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிப்பேன் என சிறிலங்கா துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான படகு சேவை தாமதமடைவதற்கு இந்திய தரப்பே காரணம் எனவும் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார.

எந்த தருணத்திலும் தயார் 

விடுதலைப் புலிகளின் படகுகளுக்கும் அனுமதி - பச்சைக்கொடி காட்டுமா இந்தியா..! உண்மையை போட்டுடைத்த அமைச்சர் | New Ferry Service Sri Lanka India Reason For Delay

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவிடமே பிரச்சினை உள்ளது. படகு சேவையை ஆரம்பிக்க எந்த தருணத்திலும் நாம் தயாராக இருக்கின்றோம்.

2011 ஆம் ஆண்டு கூட்டுக் குழு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அந்தக் கூட்டுக் குழுவே பொறிமுறை தொடர்பாக தீர்மானிக்க வேண்டும். அதில் பிரச்சினையில்லை. படகு சேவையை நடத்தவே நாமும் விரும்புகின்றோம். காங்கேசன்துறையில் பயணிகள் துறைமுக முனையத்தை அமைத்துள்ளோம். எனினும் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு 45 மில்லியன் டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அவர்களே ஆலோசனைக் குழுவொன்றையும் நியமித்துள்ளனர். ஏனைய அபிவிருத்திகளை அவர்கள் செய்தாலும் பயணிகள் முனையத்தை எமது செலவிலேயே செய்ய வேண்டும்.

இறுதியாக இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள தொடர்புகள் மூலம், நாகபட்டிணத்தில் இருந்து மாத்திரம் படகு சேவையை முன்னெடுக்க முடியும் என சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது. வேறு எந்தவொரு துறைமுகத்தில் இருந்தும் படகு சேவையை முன்னெடுப்பது தொடர்பாக அவர்கள் எதனையும் கூறவில்லை.

ஆகவே நாகபட்டிணத்தில் இருந்து மாத்திரமே படகு சேவையை ஆரம்பிக்க முடியும். இந்தியாவுடனான பாதுகாப்பு உள்ளிட்ட மதிப்பீடுகளின் பிரகாரம், இந்தியா அங்கீகாரம் அளித்தால் நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்.

இந்தியா அதிகாரிகளை தொடர்புகொண்டு, நம்பகத்தன்மை, உண்மைத்தன்மையை நிரூபித்து, நாகபட்டிணத்தில் இருந்து படகு சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கம் அனுமதி அளித்தால், எந்தவொரு படகு சேவையையும் முன்னெடுக்க முடியும்.

தற்போதைய நிலைமை

விடுதலைப் புலிகளின் படகுகளுக்கும் அனுமதி - பச்சைக்கொடி காட்டுமா இந்தியா..! உண்மையை போட்டுடைத்த அமைச்சர் | New Ferry Service Sri Lanka India Reason For Delay

தமிழீழ விடுதலை புலிகளின் படகு வந்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இந்தியா அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதுவே தற்போதைய நிலைமை.

அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போது, இந்தப் படகு சேவையை முன்னெடுக்க 10 வரையான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். அவர்களிடம் சில தெரிவு பொறிமுறைகள் உள்ளன. அனைவருக்கும் அனுமதி வழங்கினாலும் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அது போட்டித்தன்மையை உருவாக்கும்.

படகு சேவைகளை பயன்படுத்தும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஒன்றாக இருக்கும். குறைந்த செலவில் படகு சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

மற்றுமொரு பிரச்சினை நிலம். எம்மால் மூன்று ஏக்கர் காணியை வழங்க முடியும். இந்தியாவினால் தெரிவுசேய்யப்படும் படகு சேவை தரப்பினருக்கு அந்தக் காணியை வழங்க வேண்டும்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025