இலங்கைக்கான புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்
இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை அநுரகுமார திசாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayake) கையளித்துள்ளனர்.
குறித்த நிகழ்வு இன்று (24.03.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள்
அதன்படி, பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும் (Mr. Remi Lambert), பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம். கலீலும் (Mr.Ihab I.M. Khalil) மற்றும் நேபாள தூதுவராக கலாநிதி பூர்ண பகதூர் நேபாளியும் (Dr. Purna Bahadur Nepali) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 2 நாட்கள் முன்
