ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Uva Province
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
ஊவா மாகாணத்தின் (Uva Province) புதிய ஆளுநராக அனுர விதானகமகே (Anura Vidanagamage) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (A.J.M. Muzammil) நேற்று (05) பதவி விலகியதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இன்று (06) அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஆளுநர் நியமனம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து, ஏ.ஜே.எம். முஸம்மில் ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.
இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகேவின் (Thenuka Vidanagamage) சகோதரரான அனுர விதானகமகே, ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 21 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி