ஆசிரியர் சேவையில் மேலும் 5500 புதிய பட்டதாரிகள்!
Ministry of Education
Bandula Gunawardane
Ceylon Teachers Service Union
Sri Lankan Schools
Education
By Pakirathan
புதிய பட்டதாரி ஆசிரியர்கள் 5,500 பேர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், புவியியல் மற்றும் வர்த்தகம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கு மூன்று மொழி ஊடகங்களிலிருந்தும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.
இதனை கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
புதிய நியமனங்கள்
7,500 ஆசிரியர்களுக்கு இம்மாதம் 16 ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, பௌதீக வளங்களையும், மனித வளங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரம் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், அதற்கு மாணவர்களின் ஒழுக்கமும் இன்றியமையாதது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்