இன்று கொழும்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கொழும்பு இன்று விடுமுறை தினம் போல் உள்ளது. மக்களும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கின்றார்கள்.
எனினும் இப்படியே போக விட முடியாது. நாமும் இதில் கவனமாக இருக்க வேண்டும் என புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்..
கொரோனா தொற்றுநோயை சமாளிக்க ஒரே வழி தடுப்பூசி செலுத்துதலும், சுகாதார ஆலோசனைக்கமைய வாழ முயற்சிப்பதுதான் எனவும் குறிப்பிடுகின்றார்.
உலகின் வலிமையான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் கூட கொரோனா தொற்றுநோயால் ஆரம்ப நாட்களில் நாட்டை மூடிவிட்டன.
ஆனால் நாட்டை மீண்டும் திறப்பதில் போராட வேண்டியிருந்தது.
பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அது நியாயமானது என்று நினைக்கிறேன்.
இதனால் கொழும்பில் இன்று விடுமுறை போல் உள்ளது. மக்களும் தங்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கின்றார்கள்.
எனினும் இப்படியே போக விட முடியாது. நாமும் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.