இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய அதிபர் திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக இந்திய அதிபர் திரௌபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார்.
மிலிந்த மொரகொட பதவி வகித்தார்
இவருக்கு முன்னதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட இந்தப் பதவியை வகித்தார்.
கடந்த செப்டம்பரில் அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சேனுகா திரேனி செனவிரத்ன அதிபர் செயலகத்தில் வெளிநாட்டு ஊடகப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.
அத்துடன் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஐக்கிய இராச்சியத்தில் உயர்ஸ்தானிகராகவும் பின்னர் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
President Droupadi Murmu received credentials from Ms Kshenuka Dhireni Senewiratne, High Commissioner of the Democratic Socialist Republic of Sri Lanka; and Mrs Aliki Koutsomitopoulou, Ambassador of Greece at Rashtrapati Bhavan. pic.twitter.com/xmPbJG1PMT
— President of India (@rashtrapatibhvn) January 5, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |