கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நெடுஞ்சாலை
கொழும்பு துறைமுகத்தையும் கொழும்பு துறைமுக நகரத்தையும் நேரடியாக கொழும்பு விமான நிலையத்துடன் இணைக்கும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்திலிருந்து துறைமுகம் மற்றும் போர்ட் சிட்டி (Portcity) பகுதி ஆகிய இரண்டிற்கும் இணைப்பு வழங்குவது ஒரு தனித்துவமான அம்சமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக தாமதம்
இந்த நெடுஞ்சாலைத் திட்டம் முதலில் 2023இல் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டது, இருப்பினும், கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் 85% க்கும் அதிகமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நெடுஞ்சாலை கொழும்பில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கவும், நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பிலிருந்து கொழும்பில் உள்ள சர்வதேச துறைமுகத்திற்கான இணைப்பை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நள்ளிரவில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |