புதுவருட கொத்தணி உருவாக யார் காரணம்? -அமைச்சர் கெஹலிய வெளியிட்ட புதிய தகவல்
புதுவருட கொத்தணி நாட்டில் உருவாகுவதற்கு சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (23) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அதில் அவர் மேலும் தெரிவிக்யைில்,
இலங்கையில் திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை உரிய நேரத்தில் வழங்கவில்லை. உரிய நேரத்தில் அந்த தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்திருக்கும் பட்சத்தில், புதுவருட கொத்தணி நாட்டில் உருவாகியிருக்காது.
ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிலிருந்த ஒரு சிலர், திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை வழங்க 5 வாரங்கள் தாமதப்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இவ்வாறான சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.