மருந்துச் சீட்டுக்களை முறையாக எழுதாத மருத்துவர்களுக்கு வெளியான எச்சரிக்கை
மருந்துச் சீட்டுகளை எழுதுதல் மற்றும் பரிந்துரைத்தல் தொடர்பான விடயங்களில் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மருத்துவ நிபுணர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ சபை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தெளிவு மற்றும் நோயாளி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த வழிகாட்டுதல்கள் அவசியம் என்று சபை வலியுறுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று எச்சரிக்கை
அவ்வாறான தெளிவின்மை சரியான மருந்தை அடையாளம் காண்பதை கடினமாக்கியுள்ளதாகவும் இது நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்களுக்கான நெறிமுறை நடத்தை வழிகாட்டுதல்களில் மருந்துச் சீட்டுகள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது குறித்த குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளன என்றும் சபை தெரிவித்துள்ளது.
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறும் மருத்துவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |