இஸ்ரேல் புதிய இராணுவ தளபதியின் சபதம்
இஸ்ரேல்(israel) இராணுவத்திற்கு புதிய தளபதி பதவியேற்றுள்ள அதேவேளை ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன் என அவர் சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஹர்சி ஹலிவி. ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹர்சி ஹலிவி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், ஹமாசுக்கு எதிரான போர் நீடித்து வந்ததால் தொடர்ந்து அவர் பதவியில் இருந்தார்.
புதிய இராணுவ தளபதி
அதேவேளை, மார்ச் 5ம் திகதியுடன் இராணுவ தளபதி பதவியில் இருந்து விலகுவதாக ஹர்சி ஹலிவி தெரிவித்தார். இதையடுத்து, புதிய இராணுவ தளபதியை தேர்ந்தெடுக்க இஸ்ரேல் அரசு ஆலோசனை மேற்கொண்டது.
அதன்படி, புதிய இராணுவ தளபதியாக இயல் சமீர்(Eyal Zamir)தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றி
இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இயல் சமீர் நேற்று(05) பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய இராணுவ தளபதி இயல் சமீர், ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன். ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரையும் மீட்பேன்' என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
