புதிய கொவிட் திரிபை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு
தற்போது பரவும் புதிய JN-1 கொவிட் திரிபை சமாளிக்க சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் மாதிரிகள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை உட்பட 19 வைத்தியசாலைகளுக்கு மாதிரிகள் அனுப்பப்படுகின்றன.
புதிய JN-1 கொவிட் வகை
ஆனால் புதிய JN-1 கொவிட் வகை இலங்கைக்குள் பிரவேசித்துள்ள போதிலும், அது தொடர்பான மரபணு வரிசைமுறை பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
புதிய கொவிட் திரிபை கண்டறிய மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்
எனினும், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை இதுவரை வழங்கவில்லை என சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேவேளை மருத்துவ விநியோகத் துறையில் பரிசோதனைகளுக்குத் தேவையான வினைத்திறன் கருவிகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |