நத்தார் தினத்தில் இடம்பெற்ற திகில் சம்பவம்! கொத்தாக உயிரிழந்த மக்கள்
காசாவின் அல்-மகாஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை அந்த பகுதியில் அதிகளவான குடும்பங்கள் வசித்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வீடுகள் சேதம்
குறித்த தாக்குதலில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் மக்கள் அடர்த்தியான குடியிருப்பு தொகுதி அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரவித்துள்ளார்.
குறித்த தாக்குதலால் மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது.
காசா - இஸ்ரேல் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில் காசாவின் அனைத்துப் பகுதிகள் மீதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து
15 இராணுவ வீரர்கள் பலி
தற்போது இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நேருக்கு நேர் தரைவழியில் சண்டையிட்டு வருவதால் இராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை 154 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் கடந்த வாரத்தில் மட்டும் 15 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |