இலங்கையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புக்கள்! ரணில் வழங்கிய உறுதி
இலங்கையில் (Sri Lanka) எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களின் ஊடாக அதிக வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், நாட்டில் காணப்படும் வேலையின்மையை குறைக்க முடியுமென அவர் குறிப்பிட்டு்ள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வேலையின்மை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் திட்டங்கள்
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிப்பது தொடர்பில் இளைஞர்கள் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த 5 வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |