கிளிநொச்சி மாவட்ட சாரணிய ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நியமனம்
Kilinochchi
Sri Lankan Peoples
By Dilakshan
கிளிநாச்சி மாவட்டத்தின் புதிய சாரண மாவட்ட ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் (C.Vikneswaran) நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநாச்சி மாவட்டத்தின் சாரண மாவட்ட ஆணையாளராக கடமையாற்றிய மு.பிரேம்குமார் கடந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக சேவையாற்றி அவரது சேவை காலம் முடிவடைந்தமையால் புதிய மாவட்ட ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன், நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவரை பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித் பெனான்டோ, கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளராக நியமித்து கடிதத்தினை இன்று வழங்கி வைத்துள்ளார்.
பல சாதனைகள்
புதிய மாவட்ட ஆணையாளர் பளை மத்திய கல்லூரியில் சிறந்த சாரணராக சேவையாற்றி, ஜனாதிபதி விருதினை பெற்றவர்.
அத்தோடு, அவர் அப்பாடசாலையை தேசிய ரீதியில் பல சாதனைகள் படைப்பதற்கு காரணமாக இருந்தவர் ஆவார்.
மேலும், கிளிநொச்சி உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்