ரணிலின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம்

Colombo Kandy Government Of Sri Lanka
By Vanan Nov 08, 2023 11:20 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற மனநிலையில் இருக்க வேண்டிய சமூகமில்லை என்பதே அரசின் கொள்கை எனவும், அவர்களை இனிமேலும் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதக் கூடாது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்பட மாட்டாது..! பந்துல குணவர்தன திட்டவட்டம்

வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்பட மாட்டாது..! பந்துல குணவர்தன திட்டவட்டம்


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், சுமார் பதினாறு இலட்சம் அங்கவீனர்கள் இதுவரை முறையாக சமூக மயப்படுத்தப்படவில்லை.

அதிபரின் முழுமையான வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் எதிர்வரும் வருடத்தில் அவர்களுக்கான வேலைத்திட்டத்தை நாம் சிறப்பாக நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

சர்வதேச அங்கவீனர் தினம் 

டிசெம்பர் மாதம் முதலாம் திகதி சர்வதேச அங்கவீனர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ரணிலின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம் | New Law For Persons With Disabilities

அதனையொட்டி ஒரு ஆரம்ப நிகழ்வாக அங்கவீன சமூகத்தையும் ஏனைய சமூகத்தைப்போன்று, வலுவூட்டுவதற்காகவும் அவர்களை அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக்கொள்ளவும், அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரமானங்களுக்கு ஏற்பவும் சுற்றுலாத் துறையில் அங்கவீன சமூகத்தை இணைத்துக்கொள்ளும் வகையில், EMPO 2023 என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.

கொழும்பு – கண்டி வரை அங்கவீனர்களுடன் பயணிக்கவுள்ளோம். எம்மைப் போன்று அவர்களுக்கும் அதே உரிமைகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் (Accessibility) வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

புகையிரதக் கட்டமைப்பு உள்ளிட்ட முழுமையான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பிலும், மதஸ்தலங்களிலும் அங்கவீனர்களுக்கான பயண வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை உறுதியாகத் தெரியப்படுத்துவதே இந்தக் கொழும்பு – கண்டி புகையிரதப் பயணத்தின் விசேட நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டத்தை வருடாந்தம் நடத்துவதன் மூலம், சர்வதேச அளவில் அங்கவீனர்களும் சுற்றுலாப் பயணிகளாக இந்நாட்டுக்கு வருகை தருவதை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அங்கவீனர்கள் தொடர்பான சட்டத்தை திருத்தி புதிய சட்டமொன்றைக் கொண்டு வருமாறு அங்கவீனமுற்றவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

இது குறித்து பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றாலும் கூட, இதுவரை இந்த சட்டத் திருத்தம் முறையாக நடைபெறவில்லை.

எனவே சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சர் என்ற வகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் எதிர்வரும் வருடத்தின் முதல் காலாண்டில் அது தொடர்பான பணிகளை நிறைவுசெய்து நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

அங்கவீனர்களுக்கான சட்டப் பாதுகாப்பு

முக்கியமாக அங்கவீனர்களுக்கான சட்டப் பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தின முதல் காலாண்டில் இந்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அவசியமான பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

ரணிலின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம் | New Law For Persons With Disabilities

அங்கவீனர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் அவர்களை பங்கேற்கச் செய்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.

இதன் ஊடாக அவர்களைத் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற நிலையில் இருந்து விடுபட்டு,இரண்டாம் தரப் பிரஜைகளாக அவர்களைக் கருதும் சூழலை மாற்றுவோம்.

மேலும், வலுவூட்டல் செயல்முறையுடன் அவர்களுக்கான ஓய்வூதிய முறை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உத்தேச வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவில் நாம் கூறியுள்ளோம்.

ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றம்!

ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றம்!

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பாடநெறி

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பாடநெறியை (disability studies) பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்வாங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

ரணிலின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம் | New Law For Persons With Disabilities

அதன் ஊடாக அவர்களுக்கான தொழிநுட்பத் திறனுடன் கூடிய உபகரணங்களைத் தயாரித்தல் உட்பட அவர்களுக்கான ஏனைய வசதிகளை ஏற்படுத்தவும், அவர்கள் தொடர்பான மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026