பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் : அநுர அதிரடி அறிவிப்பு
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் குறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தற்போதைய சமூகத்துக்குப் பொருத்தமான வகையில் இந்த புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கும், நாட்டின் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |