வெளிநாடுகளில் உள்ள இலங்கையருக்கு கிடைக்கவுள்ள புதிய திட்டம்
Bandula Gunawardane
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு வர்த்தக வங்கிக்கும் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவதன் ஊடாக விசேட கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
அமைச்சர் பந்துல குணவர்தன இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
வர்த்தக வங்கிகளும் இணக்கம்
இந்த பிரேரணைக்கு நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார (electronic) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்ககப்படும் என்று கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி