பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அட்டை பெறாதவர்கள்
40 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள், கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்கள், வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்தவர்கள், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,500 ரூபா அபராதம்
அதேவேளை, 40 வயதுக்கு மேற்பட்ட, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்த்து வைப்பதற்காக இந்த அபராத் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடமிருந்து மட்டும், முன்னர் அறிவிடப்படும் அபராதத் தொகையான 250 ரூபாவை வசூலிக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS
