புதிய சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக பதவிப்பிரமாணம்!
Janaka Wakkumbura
Keheliya Rambukwella
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Laksi
சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புகவெல்ல அவர்கள் அமைச்சு பதவியிலிருந்து விலகிய நிலையில் குறித்த அமைச்சுக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பதவிப்பிரமாணம்
அதிபர் செயலகத்தில் இன்று(20) அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அவர் ஏற்கனவே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் அதற்கு மேலதிகமாக தற்போது சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
மேலும், தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டில் கெஹலிய ரம்புகவெல்ல கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்த இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 15 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்