பிரான்சின் ஆதரவுடன் சுவீடனில் புதிய அணுமின் நிலையங்கள்
பிரான்சின் ஆதரவுடன் சுவீடனில் புதிய அணுமின் நிலையங்களை நிர்மாணிக்கும் சாத்தியக்கூறுகளை அதன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் இன்று பாரிசில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையப்பொறுப்பை சுவீடன் புத்தாண்டு முதல் பொறுப்பேற்ற நிலையில், இன்று பிரான்சுக்கு வருகை தந்திருந்த அவர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரனுடன், எலிசே மாளிகையில் சந்திப்பை நடத்திய போது இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
புதிய அணுமின் நிலையங்கள்
சுவீடனில் புதிய அணுமின் நிலையங்களை நிர்மாணிக்கப்பதற்கு பிரான்சுடன் சாத்தியமான கூட்டுறவை கோடிட்டுக் காட்டிய உல்ஃப் கிறிஸ்டெர்சன், இரண்டு நாடுகளின் கூட்டாண்மை நல்ல ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஸ்வீடனின் புதிய அரசாங்கம் புதிய அணுமின் நிலையங்களை உருவாக்க உறுதியாக உள்ளதால் பிரான்சின் அணுமின் நிலையை அனுபவங்கள் தமது நாட்டுக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் பிரான்சுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
