மனோ உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பைசர் முஸ்தபா (Faiszer Musthapha), சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe), மனோ கணேசன் (Mano Ganeshan), மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட் (Muthu Mohamed) ஆகியோர் இன்று (17) இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபா இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட், ஆகியோர் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பை தொடர்ந்து புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான நிசாம் காரியப்பர் நாளைய தினம் (18) பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |