கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வாரங்களுக்குள் புதிய நடவடிக்கை
sri lanka
people
bandaranayaka international airport
By Shalini
காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அடுத்த மூன்று வாரங்களுக்குள் புதிய பி.சி.ஆர் ஆய்வகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.
இதன் மூலம் பயணிகளின் பி. சி. ஆர் சோதனை முடிவுகள் 3 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை மிகவும் திட்டமிட்ட முறையில் நாட்டிற்குள் ஈர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவதால் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி