111 வருட ரகசியம் - டைட்டானிக் கப்பலின் புதிய புகைப்படங்கள்..!
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் செய்யப்பட்ட காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
உலகிலேயே முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலான 'டைட்டானிக்' 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியன்று அதிகாலை 2.19 மணியளவில் எதிர்பாராத விதமாகப் பனிப்பாறையில் மோதி நீரில் மூழ்கியது.
அமெரிக்காவின் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க்கிற்கு சென்ற டைட்டானிக்கின் முதல் பயணம் பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
வெளியாகிய புகைப்படங்கள்
அந்த கப்பல் ஏன் மூழ்கியது என்ற கேள்விக்கு இன்னும் ஒரு பதில் கிடைக்கவில்லை. ஆகவே தற்போது வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்கள் மூலமாக ஏதாவது பதில் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக கடலுக்குள் இருப்பதை தெளிவாக காண முடியவில்லை. ஆகவே தற்போது உள் சென்று டைட்டானிக் கப்பலின் சில பகுதிகளை மட்டும் கமெராக்கள் காட்டியுள்ளது.
இது முப்பரிமாண காட்சியில் விளங்குவதால் கப்பலின் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பது தெரியவந்துள்ளது.
டைட்டானிக்கின் புதிய 3டி ஸ்கேன்கள், அந்த இரவில் சரியாக என்ன நடந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க