ரஷ்யாவில் கருவுறுதலை அதிகரிக்க நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டம்
ரஷ்யாவில் ( Russia) கருவுறுதலை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கரேலியா குடியரசு அதிகாரிகள் புதுமையான சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி,25 வயதுக்குட்பட்ட உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தால் அவர்களுக்கு 100,000 ரூபிள் ( இலங்கை மதிப்பில் ரூபா. 3.44 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவுறுதலை அதிகரிக்க நடவடிக்கை
நாட்டில் கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்ததிட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவும் அதன் பிராந்தியங்களும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
உக்ரைனுடனான (Ukraine) சமீபத்திய போரில் ரஷ்யாவில் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் இராணுவத்தில் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று பயந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கருத்தடை
மாஸ்கோ டைம்ஸ் கட்டுரையின்படி, நாட்டில் ஆணுறைகள் மற்றும் மாத்திரைகள் போன்ற கருத்தடைகளை அரசாங்கம் ஏற்கனவே தடை செய்துள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு டிசம்பரில், ஒவ்வொரு ரஷ்ய பெண்ணுக்கும் 8 குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு புடின் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |