அவருக்கு பதில் இவர்: சிஎஸ்கேவில் இணையும் புதிய வீரர்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய டெவோன் கான்வே (Devon Conway) காயம் காரணமாக விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக புதிய வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) பிரதிநிதித்துவப்படுத்திய கான்வே, 23 போட்டிகளில் விளையாடி 924 ஓட்டங்களை பெற்றார்.
அதில், 9 அரை சதங்கள் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 92 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்.
புதிய வீரர்
இந்நிலையில், அவர் விலகியதை தொடர்ந்து மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்காக ரிச்சர்ட் க்ளீசனை(Richard Gleeson) சென்னை அணி சேர்த்துள்ளது.
இந்த புதிய வீரர் 6 ரி 20 போட்டிகளில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அத்தோடு, க்ளீசன் மேலதிகமாக 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், INR 50 Lac என்ற விலைக்கு சென்னை அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
Welcoming with a glee!??
— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2024
Whistle Vanakkam, Richard! ??
? - https://t.co/7XCuEZCm21 #WhistlePodu #Yellove pic.twitter.com/rJa1HilaQ6
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |