புதிய ஆண்டில் புதிய அரசியல் கட்சி : அதிபர் தேர்தலை மையப்படுத்திய நகர்வு!
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி காலை ராஜகிரிய பகுதியில் உள்ள கட்சி தலைமையகத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய கட்சியின் அங்குரார்ப்பணம்
இந்த பின்னணியில், கட்சியை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாகவும், இதற்கமைய, கட்சி அடுத்த மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : கண்டனம் வெளியிட்டுள்ள அரச தலைவர்கள்(காணொளி)
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பதற்கான அழைப்பு கட்சியின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வாவின் புதிய அரசியல் பயணம்
இதேவேளை, புதிய அரசியல் கட்சியொன்றை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மேர்வின் சில்வா ஆரம்பிக்கவுள்ளதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |