மைத்திரியின் மகனுக்கு புதிய பதவி
Polonnaruwa
SLFP
Maithripala Sirisena
Sri Lankan political crisis
By Vanan
முன்னாள் அதிபரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவர் பொலன்னறுவை - பத்தாஹிர தொகுதிக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
மக்களுக்காக பணியாற்றுவேன்
தனது புதிய நியமனத்தைப் பயன்படுத்தி மக்களுக்காக பணியாற்றுவேன் என தஹாம் சிறிசேன தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் மீது நம்பிக்கை வைத்த கட்சி தலைமைக்கும் மற்றவர்களுக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர் பேரவையின் தலைவர்
இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பேரவையின் தலைவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

