பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி
பாகிஸ்தானின் புதிய அதிபராக மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தையுமான ஆசிஃப் அலி ஜா்தாரி நேற்றைய தினம் அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி ஆட்சியமைக்க பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆதரவு அளித்தது.
ஆதரவு
அதனை தொடர்ந்து, நவாஸ் ஷெரீஃபின் சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் நாட்டின் பிரதமராக 2-ஆவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றாா்.
இதற்கான பேச்சுவாா்த்தையின்போது, அதிபா் தோ்தலில் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு ஆதரவு அளிக்க பிஎம்எல்-என் கட்சி ஒப்புக்கொண்டது.
ஏற்கனவே அதிபராக
அதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் இரு கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜா்தாரி வெற்றிபெற்றாா்.
அத்துடன், கடந்த 2008-லிருந்து 2013 வரை பாகிஸ்தானின் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி பொறுப்பு வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |