மின்சார கொள்வனவிற்கான புதிய கட்டண முறைமை
புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான புதிய கட்டண முறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, புதிய மின்சார கொள்வனவு கட்டண முறை நாளை (25) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தியின் தன்மையை கருத்திற்கொண்டு, புதிய கட்டண முறை மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கொள்முதல் விலைகள்
அதன்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையங்களுக்கான கட்டண முறை, மின் நுகர்வோருக்கான கட்டண முறை, மின்கல சேமிப்பு அமைப்புடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையங்களுக்கான கட்டண முறை போன்றவை இந்த வகைப்படுத்தலில் அடங்கும்.

இந்தக் கட்டண முறைக்கான நடைமுறைகள் மற்றும் மின்சார கொள்வனவு விலைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening