கூப்பன் முறையில் எரிபொருள் விநியோகம் ?
people
fuel
distribution
coupon
By Sumithiran
கூப்பன் முறைக்கு எரிபொருள் வழங்க முடியுமா என்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய டொலர் நெருக்கடியை எதிர்கொண்டு, எரிபொருள் இறக்குமதியின் விலை உயர்வை கருத்திலெடுத்து இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்வது பொருத்தமானது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளமையும் இந்த பிரேரணைக்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அமைச்சரவை அந்த யோசனைக்கு உடன்படவில்லை.
எரிபொருள் இறக்குமதிக்கு ஒரு மாதத்திற்கு $300 மில்லியன் முதல் $420 மில்லியன் வரை செலவாவதாகவும் கொரோனா காலத்தின் பின்னர் நாட்டில் எரிபொருள் பாவனையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்