புதிய பயங்கரவாத சட்டம்: தமிழர்களின் கூட்டு நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாட அழைப்பு!
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தின் முன்மொழியப்பட்டுள்ள வரைபு தொடர்பான கலந்துரையாடலுக்கு சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தின் வரைபு எம்மில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
கலந்துரையாடல்
அதன்படி, குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், பழைய சட்டத்தை விட புதிய சட்டம் முன்னேற்றகரமானதா? அல்லது பழைய சட்டத்தை நீக்கினாலே போதுமானதா? என்பது தொடர்பில் தமிழர்களாகிய எமது கூட்டு நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்? என்பது தொடர்பில் கலந்துரையாட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |