வரலாற்று சாதனை படைத்த சென்னை வீரர் - தரப்படுத்தலில் முதலிடம்..!
சென்னை அணிக்காக விளையாடும் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் விக்கெட் கீப்பர்-மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டெவோன் கான்வே புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
கடந்த செவ்வாய் அன்று செவ்வாயன்று டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்தார்.இதன் மூலம் குறைந்த போட்டியில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் போது கான்வே இந்த சாதனையை நிகழ்த்தினார்.
200 ஓட்டங்களை பெற்றுள்ளார்
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கான்வே 156 பந்துகளில் 12 பவுண்டரிகள் உட்பட 82 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவரது டெஸ்ட் சாதனையானது 11 டெஸ்ட் போட்டிகளில் 19 இன்னிங்ஸ்களில் 55.55 சராசரியில் 1,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
மொத்தமாக மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் கடந்துள்ள அவரின் டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஓட்டமாக 200 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
1000 ஓட்டங்களை கடந்த வீரர்
20 இன்னிங்சில் 1000 ஓட்டங்களை கடந்த நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் ஜான் ரீடின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
உலக டெஸ்ட் தரப்படுதலில் இங்கிலாந்து வீரர் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் குறைந்த போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
1925ல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக போட்டியின் மூலம் 12 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை செய்தார்.
More milestones for Devon Conway as he passes 1000 Test runs in just his 19th innings - the fastest NZer ever to the mark. He and Latham have pushed the total past 150 with stumps looming. Scorecard | https://t.co/zq07kr4cGV #PAKvNZ pic.twitter.com/FqI0CeGmte
— BLACKCAPS (@BLACKCAPS) December 27, 2022
கராச்சி டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், நியூசிலாந்து 165/0 என்ற நிலையில் இருப்பதோடு கான்வே (82*) மற்றும் டாம் லாதம் (78*) ஆட்டமிழக்காமல் நிதானமாக துடுபடுத்தாடி வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
