காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் உருவாக்கிய இலஞ்ச வீதி!!
காலி முகத்திடலில் அரச தலைவர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீதிக்கு போராட்டக்காரர்கள் புதிய பெயரை சூட்டியுள்ளனர்.
இதன்படி, குறித்த வீதிக்கு இலஞ்ச வீதியென (Bribe road) போராட்டக்காரர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இதேவேளை, காலிமுகத்திடலில் “கோட்டா கோ கம“ எனும் பெயரிலான கிராமத்தை உருவாக்கியுள்ள போராட்டக்காரர்கள் கோட்டாபயவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு 26ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களை அப்புறப்படுத்துவதற்கு காவல்துறையினர் முயற்சித்ததுடன் இதன் காரணமாக அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.
மற்றும் முஸ்லிம் மக்களின் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்றைய தினம் ஆர்ப்பாட்டக்களத்தில் விசேட தொழுகை இடம்பெற்றது.
தொழுகையில் பெருமளலிலான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டதுடன் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை, அங்கு நோன்பு பெருநாளை விசேட விருந்து நிகழ்வொன்று இடம்பெற்றதுடன் பௌத்த தேரர்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உள்ளிட்ட பல மதத்தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதனைதொடர்ந்து, அரசாங்கத்திற்கு எதிரான இப்போராட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியமும் கலந்துகொண்டது.
பெருந்தொகையான பிக்குகள் உட்பட போராட்டக்காரர்கள் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
                                        
                                                                                                                         
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        