இன்று முதல் புதிய விதிமுறைகள்! வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு இன்றுமுதல் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளுக்கு அமைய, வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதன் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க வேண்டும்.
இதன்போது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை.
எவ்வாறாயினும், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள், PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத போதிலும் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடப்பட்டுள்ளார்.