கொரோனாவால் உயிரிழக்கும் 2400 பேரை அடக்கம் செய்ய புதிய இடம் தெரிவு
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதி காணியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றுமொரு இடம் தெரிவு செயயப்பட்டுள்ளது.
இதன்படி அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் இந்த காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட காணியே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த காணியில் கொவிட் தொற்றில் உயிரிழக்கும் 2400 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உரிய இடம் என அம்பாறை மாவட்ட செயலாளர் உறுதிப்படுத்தி கூறியுள்ளதாகவும், இந்த இடம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.