கொரோனா வைரஸின் புதிய விகாரம் “COVID TONGUE”! முழு விபரம் உள்ளே...
கொரோனா வைரஸின் புதிய நோய் அறிகுறிகள் தொடர்பிலான தகவல்களை தொற்று நோய் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். வாய் மற்றும் நாக்கு பகுதிகளில் கனதியான கொப்புலங்களை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு “COVID TONGUE” என பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வீரியம் அடைந்து வருவதுடன், அதன் நோய் அறிகுறிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் கிங்க்ஸ் லண்டன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவிக்கையில், தலைவலி உள்ளிட்ட சிறு நோய் அறிகுறிகள் தென்படுமாயின், இயலுமானளவு சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நோய் அறிகுறிகள் தென்படும் காலப் பகுதியில் சுவை மற்றும் மனம் ஆகியன குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்;. COVID TONGUE தொற்றுக்கான நோய் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ணம் அதிகரித்தல் வரட்டு இருமல் தொண்டை வலி சுவாசிக்க சிரமமாதல் மூக்கு பாரமாக இருப்பதை போன்ற உணர்வு நெஞ்சுவலி எவ்வாறாயினும், இந்த புதிய நோய் அறிகுறிகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை.
இந்த புதிய நோய் இலங்கையில் இதுவரை எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை என தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
